×

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் காலமானார்

மொகாலி: பஞ்சாப் முன்னாள் பிரகாஷ்சிங் பாதல் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 95. பஞ்சாப் மாநிலத்தில் 5 முறை முதல்வராக இருந்தவர் பிரகாஷ்சிங் பாதல். சிரோண்மனி அகாலி தளம் கட்சியை சேர்ந்த இவர் மூச்சுதிணறல் காரணமாக மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு 8 மணிக்கு காலமானார். 1947ல் அரசியலில் நுழைந்த பாதல் 1952ம் ஆண்டு தனது இளம் வயதில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். பஞ்சாப் சட்டப்பேரவைக்கு 9 முறை அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு சுக்பீர்சிங் பாதல் என்ற மகனும், பர்னீத்கவுர் என்ற மகளும் உள்ளனர்.

The post பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் காலமானார் appeared first on Dinakaran.

Tags : Former ,Punjab ,Chief Minister ,Prakash Singh Badal ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…